டப்பிங் பேச துடிக்கும் நந்திதா

Bookmark and Share

டப்பிங் பேச துடிக்கும் நந்திதா

விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் இவரது நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘அஞ்சல’, ‘உப்பு கருவாடு’, ‘உள்குத்து’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

இவர் அளித்த பேட்டி வருமாறு, ‘என்னுடைய நடிப்பில் ‘உப்பு கருவாடு’ இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் குழந்தைத்தனமான பெண்ணாகவும், துணிச்சலான பெண்ணாகவும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ராதா மோகன் இயக்கத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் கதாபாத்திரம் என்னுடைய பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

எனக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்கள் அமைகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் இயக்குனர்கள் என்னை தேர்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. படங்களில் டப்பிங் பேச ஆசைப்படுகிறேன்.

ஆனால், இதுவரை என்னை டப்பிங் பேச யாரும் அழைக்கவில்லை. தமிழ் மொழி பேச மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஓரிரு வார்த்தைகள் எனக்கு பேச வராது. இதனால் ‘அஞ்சல’ படப்பிடிப்பின் போது, விமல் என்னை கலாய்த்தார்.

‘அஞ்சல’ படத்தில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இவர் ஒரு பேட்டியில் நான் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகிறது என்று கூறினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.

பல சிறந்த படங்களை இயக்கிய ஆர்.வி.உதயகுமாருடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions