பிரபல ஹீரோ - பெண் இயக்குனர் இணையும் புதுப்படம்

Bookmark and Share

பிரபல ஹீரோ - பெண் இயக்குனர் இணையும் புதுப்படம்

ஓஹலு குசகுசலடே மற்றும் லக்ஷ்மி ராவே மா இந்டிகி போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபல ஹீரோவான நாக சௌரியா, தற்போது புதுப்படத்தில் நடிக்கிறார்.

இளம் பெண்களின் மனதைக்கவர்ந்த நாக சௌரியா அடுத்த அடி எடுத்து வைக்கிறார். டோலிவுட்டின் முன்னணி இடத்தை பிடிக்க, அவர் தனது படங்களில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் தற்போது நடித்து வெளிவர உள்ள படம் ஜாடூகாடு ஆகும். இந்த படத்தில் அவர் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய சாக்லேட் பாய் இமேஜை மாற்றி அமைக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகையான சோனாரிக்கா பாதோரியா நடிக்கிறார்.

பிரபல இயக்குனர் யோகி இயக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான வி.வி.என் பிரசாத் தயாரிக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகா உள்ளது. இதற்கு அடுத்த படத்தில் தான் ஹீரோ நாக சௌரியா பிரபல பெண் இயக்குனரான நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை அல  மொடலைந்தி பட புகழ் தயாரிப்பாளரான தாமோதர் பிரசாத் தயாரிக்கிறார். இதில் ஏவடே  சுப்ரமண்யம் பட புகழ் மாளவிகா நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளரான கல்யாணி கொடுரி இசை அமைக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions