ஹீரோ வேல்யு கொண்ட படங்கள் தேடும் நந்திதா!

Bookmark and Share

ஹீரோ வேல்யு கொண்ட படங்கள் தேடும் நந்திதா!

அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்த பெங்களூர் நடிகை நந்திதா, அதையடுத்து, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்களில் நடித்தார்.

அப்படி அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடித்ததால், இப்போது இடம் பொருள் ஏவல் படத்தை முடித்து விட்டு உப்புக்கருவாடு என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதில், ராதா மோகனின் உப்புக்கருவாடு படத்தில் நந்திதாவை மையப்படுத்திதான் கதையே செல்கிறதாம். இதையடுத்தும் சில படங்களில் நடிக்கவும் கதை கேட்டிருககிறாராம்.

ஆனால் அந்த படங்களிலும் வளர்ந்து கொண்டிருக்கும் ஹீரோக்கள்தான் நடிக்கிறார்களாம். நந்திதா எதிர்பார்ப்பது போன்று முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவுமே அவருக்கு கிடைக்கவிலலையாம்.

அதனால் மனதளவில் வருத்தத்தில் இருக்கும் நந்திதா, தற்போது மிர்ச்சி சிவாவுடன் ஒரு படத்தில் நடிப்பவர், அந்த படத்தில் ஓரளவு கிளாமராகவும் நடிக்கிறாராம். தான் இதுவரை கிளாமராக நடிக்காததால் முன்னணி ஹீரோக்களின் படங்கள் தனக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கும் நந்திதா, தான் எதிர்பார்ப்பது போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தால் தமன்னா போன்று கவர்ச்சி அவதாரம் எடுக்கவும் தயங்க மாட்டாராம். 


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions