சின்ன பட்ஜெட் படங்களுக்கு நந்திதா வைக்கும் கண்டிசன்!

Bookmark and Share

சின்ன பட்ஜெட் படங்களுக்கு நந்திதா வைக்கும் கண்டிசன்!

அட்டகத்தி நந்திதா நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால் சாதாரண நடிகையாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த அவர், வியாபார ரீதியாக பேசப்படும் நடிகையாகி விட்டார்.

அந்தவகையில், ஆரம்பத்தில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த அவர், தற்போது ஹீரோ, டைரக்டர், பட நிறுவனம் என அனைத்தையும் ஆராய்ந்து ஓரளவு பேசப்படும் படமாக இருந்தால் மட்டுமே ஓகே சொல்கிறார்.மேலும், இதுவரை கதை விசயத்தில் பெரிதாக மூக்கை நுழைக்காத நந்திதா, இப்போது விலாவாரியாக கதையை கேட்கிறார்.

தனக்கு பர்பாமென்ஸ் பண்ண போதுமான வாய்ப்புகள் இல்லையேல் இந்த கதை எனக்கு சரிப்பட்டு வராது என்று நெத்தியடியாக சொல்லி அந்த படங்களை தட்டிக்கழித்து விடுகிறார்.இந்த நிலையில், தற்போது உறுமீன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாயகி வேடத்தில் நடித்து வரும் நந்திதா, அடுத்து இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாட முண்டியடித்து வருகிறார்.

அதனால் படப்பிடிப்பு போக மீதமிருக்கும் நேரங்களில் சில டைரக்டர்களுடன் மீட்டிங் போடும் நந்திதா, பெரிய ஹீரோ படங்கள் என்கிற பட்சத்தில் சம்பளம் பற்றி வாயை திறப்பதே இல்லைஆனால், சிறிய ஹீரோ, சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் சம்பள விசயத்தில் குறியாக இருக்கிறார். முக்கியமாக இவ்வளவு லட்சமாவது தனக்கு தர வேண்டும் என்று கண்டிசனாக சொல்கிறார்.

நந்திதாவின் இந்த திடீர் கண்டிசன் காரணமாக பட்ஜெட் படங்களுக்கு குறைந்த சம்பளத்தில் நடிப்பார் என்று நம்பி அவரை புக் பண்ண சென்ற பட அதிபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions