கிண்டல் செய்தவர்களின் வாயடைத்த நந்திதா!

Bookmark and Share

கிண்டல் செய்தவர்களின் வாயடைத்த நந்திதா!

அட்டகத்தி படத்தில் அப்போதைய புதுமுக நடிகரான தினேசுடன் நடித்தவர் நந்திதா. அதையடுத்து சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, விஷ்ணு, பரத் என பேசப்படும் நடிகர்களுடன் நடித்த அவர், இடம் பொருள் ஏவல் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து, அஞ்சல படத்தில் விமலுடனும், உப்புக்கருவாடு படத்தில் கருணாகரனுடன் நடித்துள்ளார் நந்திதா. இதன்பிறகு இன்னும் ஒருபடி மேலே ஏறி மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் நந்திதாவின் திட்டமாக இருந்தது.

ஆனால், அப்படி அவர் நினைத்துக்கொண்டிருந்த நேரம் விஜய்யின் புலி படவாய்ப்பு வந்தபோது, நாம் நினைத்தது நடக்கப்போகிறது என்றுதான் உற்சாகத்தில் இருந்தார் நந்திதா.

ஆனால், அந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என்ற இரண்டு மெகா நடிகைகள் இருக்க, இவரை இரண்டு நாட்கள் மட்டும் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க வைத்து விட்டு டாடா காட்டி விட்டனர்.

இருப்பினும், விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்து விட்டோம் என்கிற பெருமையுடன் காணப்படும் நந்திதா, எந்நேரமும் விஜய் புராணம் பாடி வருவதை சில நடிகைகள் கிண்டல் செய்யத் தொடங்கி விட்டார்களாம்.

இதனால் கடுப்பான அவர், இது ஆரம்பம்தான். கூடிய சீக்கிரமே விஜய்யுடன் ஒரு முழுப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பினை பெறுவேன். அது நிச்சயம் நடக்கும் என்று சொல்லி அவர்களின் வாயடைத்து வைத்துள்ளாராம்.


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions