மேனேஜேரை நீக்கிய நந்திதா...!

Bookmark and Share

மேனேஜேரை நீக்கிய நந்திதா...!

'அட்டகத்தி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பெங்களூரைச் சேர்ந்த நந்திதா. தொடர்ந்து தமிழில் “எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் விஜய் சேதுபதி ஜோடியாக நாயகியாக நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தோடு 'உப்பு கருவாடு' படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

கடந்த எட்டு மாதங்களாக நந்திதாவின் மேனேஜராக பிரதீப் என்பவர் பணியாற்றி வந்தார். தற்போது அவரை நந்திதா நீக்கியுள்ளார், அதோடு இனி நந்திதாவின் கால்ஷீட் விவகாரங்களை அவருடைய பெற்றோர்களே பார்க்க உள்ளார்களாம்.

இது குறித்து நந்திதா கூறியிருப்பதாவது,

“அனைத்து மீடியா நண்பர்களுக்கும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் எனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இனி, என்னுடைய தேதிகளை பிரதீப் பார்த்துக் கொள்ள மாட்டார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், எட்டு மாதங்களாக  என்னுடைய மேனேஜராக அவர் எனக்கு ஆதரவளித்ததற்கு நன்றி.

அதனால், தற்காலிகமாக என்னுடைய பெற்றோரே என்னுடைய தேதி விவகாரங்களை கவனித்துக் கொள்வார்கள். என்னுடைய வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் திரையுலகத்தினருக்கும், மீடியா நண்பர்களுக்கும் நன்றி,” எனக் கூறியுள்ளார். 


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions