மாடர்ன் ரோல் கேட்டு அடம் பிடிக்கும் நந்திதா!

Bookmark and Share

மாடர்ன் ரோல் கேட்டு அடம் பிடிக்கும் நந்திதா!

அட்டகத்தி படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தவர் நந்திதா. அந்த படம் வெற்றி பெற்றதால், அதையடுத்து அவரைத்தேடி கிராமத்து கேரக்டர்களாக செல்லத் தொடங்கின. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி படங்களைத் தொடர்ந்து இப்போது இடம் பொருள் ஏவல், அஞ்சல, உப்புக்கருவாடு, புலி ஆகிய படங்களிலும் கிராமத்து கெட்டப்பிலேயே நடித்துள்ளார்.

ஆனால், நிஜத்தில் நந்திதா சிட்டியில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால், எந்நேரமும் மாடர்ன் காஸ்டியூமில்தான் வளையவருகிறார். தனக்கு கிராமத்து உடைகளை விட சிட்டி உடைகளே ரொம்ப மேட்சாக இருக்கும் என்பதை இயக்குனர்களுக்கு உணர்த்த, யாரை எப்போது சந்திக்க சென்றாலும் பக்கா சிட்டி பெண்ணாகவே செல்கிறார்.

இருப்பினும், கிராமத்து கதைகளுக்கு மட்டுமே நந்திதாவை தொடர்பு கொள்கிறார்கள் கோலிவுட் டைரக்டர்கள். ஆனால், இந்த நிலையை தொடர விடக்கூடாது என்று நினைக்கும் நந்திதா, தற்போது சில சிட்டிப்பட டைரக்டர்களை சந்தித்து தன்னை மாடர்ன் ரோலில் நடிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறார்.

ஆனால் இதற்கு பின்னால் இன்னொரு காரணமும் உள்ளதாம். சினிமா உலகில் சிட்டி கதைகளில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் படத்துக்குப்படம் எகிறிக்கொண்டே செல்ல, வில்லேஜ் கதைகளில் நடிப்பவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லையாம்.

5 லட்சத்தை எட்டிப்பிடிக்கவே பல படங்களில் நடிக்க வேண்டியுள்ளதாம். அந்த வகையில், நந்திதாவின் சம்பளமும் இன்னும் கீழ் மட்டத்திலேதான் உள்ளதாம். அதனால் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறாராம் நந்திதா.


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions