நந்திதாவின் ஹோட்டல் வாசம்!

Bookmark and Share

நந்திதாவின் ஹோட்டல் வாசம்!

அட்டகத்தி நாயகி நந்திதா, அதையடுத்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல ஹிட் படங்களில் நடித்து விட்டார். அதோடு தற்போது மீண்டும் விஜயசேதுபதியுடன் இடம் பொருள் ஏவல் மற்றும், உப்புக்கருவாடு என சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படி தமிழில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நந்திதாவுக்கு வேறு எந்த மொழியிலும் படங்களும் இல்லை. இருப்பினும், இன்னும் சென்னையில் நிரந்தரமாக குடியேறாமல், ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டு நடித்துக்கொடுத்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது,

தமிழ் சினிமாவில் எனக்கு நல்லதொரு ஓப்பனிங் கிடைத்தது. அதோடு ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களும் கிடைத்தது. தொடர்ந்து படங்களும் கிடைத்து வருகிறது.

ஆனால், நான் எதிர்பார்க்கும் முன்னணி ஹீரோக்களின் படங்கள்தான் இன்னும் கிடைக்கவில்லை. அதனால்தான் இன்னும் நான் சென்னையில் நிரந்தரமாக குடியேறவில்லை என்று கூறும் நந்திதா, மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் கிடைத்து விட்டால் அதன்பிறகு நானும் சென்னைவாசியாகி விடுவேன் என்கிறார்.


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions