3 லட்சத்தை தியாகம் செய்த நந்திதா!

Bookmark and Share

3 லட்சத்தை தியாகம் செய்த நந்திதா!

நடிகர் நடிகைகள் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கும் வரைக்குத்தான் ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஆனால் மார்க்கெட்டை பிடித்த பிறகு அவர்கள் எங்கு சென்றாலும் வரவேற்புதான்.

முக்கியமாக கடை திறப்பு விழா, பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளுக்குகூட அவர்களைத்தான் அழைக்கிறார்கள்.  ஆனால் அப்படி செல்லும் நடிகர்- நடிகைகள், அங்கு சென்று ரிப்பன் கட் பண்ணுவதாக இருந்தாலோ அல்லது நிகழ்ச்சிகளில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்து விட்டு வருவதற்கோகூட ஒரு தொகையை வாங்கி விட்டுத்தான் செல்வார்கள்.

அந்த வகையில், அட்டகத்தி நந்திதா சென்னை மட்டுமின்றி, பெங்களூரில்கூட கடை திறப்பு விழா மட்டுமல்லாது ஏதாவது பள்ளி மற்றும் கோயில் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் சென்று வருகிறார்.

அப்படி செல்வதற்கு சில லட்சங்களை சன்மானமாக வாங்கும் நந்திதா, சென்னை வண்டலூரில் உள்ள தனியார் இஞ்சினியரிங் காலேஜில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் தான் படித்த காலத்தில் நடந்த சில சுவையான விசயங்களையும் மாணவ மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டாராம் நந்திதா, அதே சமயம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 2 லட்சம் வாங்கினாராம். சாதாரணமாக கடை திறப்பு விழாக்களுக்கு 5 லட்சம் வாங்கும் நந்திதா, இது கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் 3 லட்சத்தை தியாகம் செய்து விட்டாராம்.


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா
பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions