நடிக்க அழைக்காதீர்கள் : நந்திதா தாஸ் தடாலடி

Bookmark and Share

நடிக்க அழைக்காதீர்கள் : நந்திதா தாஸ் தடாலடி

அழகி, கன்னத்தில் முத்தமிட்டால். நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன் இந்தியில் லெஸ்பியன் கதை அம்சம் கொண்ட ஃபயர் படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நந்திதாதாஸ்.

சமீபகாலமாக அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதுடன் இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். கடந்த 2008ம் ஆண்டு ‘ஃபிராக்’ படத்தை இந்தி, உருது, குஜராத்தி ஆகிய 3 மொழிகளில் இயக்கினார். தற்போது ஆஸ்திரேலியா படமொன்றை இயக்குகிறார்.

இதுபற்றி அவர் கூறியது:

படம் இயக்குவதில்தான் இப்போது அதிக கவனம் செலுத்துகிறேன். இயக்குவதற்கான வாய்ப்பு ஏதாவது வந்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன். ‘சாத் ஹசன் மான்டோ’என்ற படம் இயக்கி வருகிறேன்.

அதேசமயம் ஆஸ்திரேலியா பாரம்பரிய மக்களுடன் இந்திய பெண் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. எனவே தற்போது 2 படங்களில் இயக்குனராக பணியாற்றி வருகிறேன்.

இதுவரை இதுபோல் செய்ததில்லை. ஹாலிவுட் படத்தில் நடிக்க அவ்வப்போது வாய்ப்பு வருவதுண்டு. இந்திய பெண்களைபற்றி அவர்கள் யோசிக்கும் நிகழ்வுகள் எல்லாமே ஒரே சாயலாகவே உள்ளது. அதனால் அதை ஏற்கவில்லை.

தவிர டி.வியில் நடிக்கவும் அதிக சம்பளத்துடன் வாய்ப்பு வருகிறது. ஆனால் நடிப்பில் எனக்கு ஆர்வம் இல்லை. நடிக்க அழைக்காதீர்கள். இயக்குவதற்கு அழைத்தால் நிச்சயம் வருவேன்.இவ்வாறு நந்திதா தாஸ் கூறினார். 

 


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
உடல் முழுவதும் தெரியும்படி பிளாஸ்டிக் உடையில் பிரபல நடிகை.!
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions