பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்

Bookmark and Share

பாக். தயாரிப்பாளரை தேடும் நந்திதா தாஸ்

கேன்ஸ் பட விழாவிற்கு சென்ற இயக்குனர்கள் தங்களது படத்துக்கு விருது கிடைக்குமா என்ற எண்ணத்தில் பங்கேற்றனர். ஆனால் நடிகை ஒருவர் தயாரிப்பாளரை தேடி இந்த விழாவில் பங்கேற்றார்.

அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்பறவை படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். ‘மான்டோ’ என்ற பெயரில் ஸ்கிரிப்ட் தயாரித்துள்ள அவர் அப்படத்தை உருது மொழில் இயக்க முடிவு செய்திருக்கிறார்.

இதற்கான தயாரிப்பாளரை தேடி கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டார். இதுபற்றி நந்திதா கூறும்போது,’மான்டோபடத்தை தயாரிப்பதற்கான தயாரிப்பாளரை கேன்ஸ் விழாவில் தேடினேன்.

குறிப்பாக தயாரிப்பாளர் பாகிஸ்தானியராக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். மான்டோ சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற எண்ணம் பாகிஸ்தான் மக்களிடம் உள்ளது. அதேநேரம் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பது இந்தியர்களுக்கும் தெரியும்.

ஆனால் அவரை இதுபோல் பிரித்துப்பார்ப்பது அவரது ஆன்மாவுக்கு விரோதமான செயல். எனவே இருநாட்டவர்களும் பகிர்ந்து இப்படத்தை தயாரிக்கலாம். அல்லது யாராவது ஒருவர் இதற்கான பொறுப்பு ஏற்கலாம்.

இது மான்டோவின் சொந்த வாழ்க்கை சரித்திரத்தை மையமாக கொண்டது. படமாக்குவதற்கான தகுதி வாய்ந்தது’ என்றார். தயாரிப்பாளர் கிடைத்துவிட்டாரா? இல்லையா? என்பதுபற்றி நந்திதா தாஸ் இன்னும் உறுதி செய்யவில்லை. 


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
உடல் முழுவதும் தெரியும்படி பிளாஸ்டிக் உடையில் பிரபல நடிகை.!
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions