அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!

Bookmark and Share

அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!

பயர் படத்தில் அறிமுகமானவர் நந்திதாதாஸ். லெஸ்பியனாக நடித்து ஒரே படத்தில் இந்தியா முழுக்க பிரபலமானவர். அதன்பிறகு ஆங்கிலம், இந்தி, ஒரியா, உருது, பெங்காலி, மலையாளம், தமிழ், மராத்தி என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார்.

தமிழைப்பொறுத்தவரை பார்த்திபன் நடித்த அழகி, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்தவர், சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை படத்தில் கடைசியாக நடித்தார். அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

சில புதுமுக டைரக்டர்கள் தங்கள் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்தபோது, அதற்கு அவரிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால் நந்திதா தாஸை மறந்து விட்டு அந்த வேடத்துக்கு வேறு நடிகைகளை நடிக்க வைத்தனர்.

ஆனால் நந்திதாதாஸ் இப்படி படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு காரணம், சமீபகாலமாக அவர் சில டாகுமெண்டரி படங்களை இயக்கி வருகிறாராம்.

குறிப்பாக, இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் வகையிலான படங்களை இயக்குவதால் நடிப்பதில் அவருக்கான ஆர்வம் குறைந்து விட்டதாம். அதேசமயம், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களிலும் அவ்வப்போது சிக்கிக்கொண்டு வருகிறாராம் நந்திதாதாஸ்.


Post your comment





Related News
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions