பெயரை மாற்றிய நந்திதா

Bookmark and Share

பெயரை மாற்றிய நந்திதா

தமிழில் ‘அட்டகத்தி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா. இதில் இவர் கல்லூரி மாணவியாகவும் தினேஷுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றதால் இப்படத்தில் இருந்து அட்டகத்தி நந்திதா என்று அனைவரும் அழைத்து வந்தனர்.

இப்படத்திற்குப் பிறகு ‘எதிர் நீச்சல்’ படத்தில் துணிச்சலான பெண்ணாகவும், ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் துறுதுறு நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வரவேற்பு பெறவே விஷ்ணுவுடன் ‘முண்டாசுப்பட்டி’, பரத்துடன் ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’, உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது நந்திதா ‘உப்பு கருவாடு’ படத்திலும், சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இதுநாள் வரை நந்திதா என்று அழைத்து வந்த தன் பெயரை தற்போது நந்திதா ஸ்வேதா என்று மாற்றியுள்ளார்.

மேலும் இனிமேல் வெளியாகும் படங்களிலும் தன் பெயரை நந்திதா ஸ்வேதா என்று பெயர் போடும் படியும், ரசிகர்கள் அனைவரும் நந்திதா ஸ்வேதா என்று அழைக்கும்படியும் கேட்டுள்ளார். 


Post your comment





Related News
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
கிளாமரா நடிக்க நான் ரெடி! நந்திதாவின் சீக்ரட்
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
அரவிந்த்சாமியின் வணங்காமுடியில் இரண்டு நாயகிகள்
தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி
இந்தி டைரக்டரை காதலிக்கிறேன்: நடிகை சுவேதா பாசு பேட்டி
அரசியல் தலைவர்களை தோலுரிக்கும் நந்திதாதாஸ்!
புலி சீக்ரெட்டை உடைத்த நந்திதா ஸ்வேதா
ஜோதிகாவின் பாராட்டில் உருகிப்போன நந்திதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions