விஜய்யுடன் படப்பிடிப்பை முடித்த நந்திதா

Bookmark and Share

விஜய்யுடன் படப்பிடிப்பை முடித்த நந்திதா

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கி வரும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்து வருகிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதிப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் அட்டகத்தி நந்திதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இது குறித்து நந்திதா கூறும்போது, சிறப்பான டீமில் நானும் இருக்கிறேன் என்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

இப்படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. விஜய் சிறந்த மனிதர், அவரை போல் ஒருவரை பார்க்க முடியாது. நான் சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட்டேன். தற்போது மற்றொரு படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பில் இருக்கிறேன் என்றார்.

புலி படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் பிறந்தநாளில் இப்படத்தை வெளியிடவுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions