மணிரத்னம் படத்தில் டப்பிங் பேசும் நானி

Bookmark and Share

மணிரத்னம் படத்தில் டப்பிங் பேசும் நானி

’கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ’ஓ காதல் கண்மணி’. இந்தப் படம் தெலுங்கில் ’ஓகே பங்காரம்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் தமிழில் துல்கர் சல்மானே டப்பிங் பேசி விடுவார். அவர் சென்னையில் படித்து வளர்ந்துவர் என்பதால் தமிழ் நன்றாகப் பேசுவார். ஆனால், அவருக்குத் தெலுங்கு தெரியாது என்ற காரணத்தால் தெலுங்கில் அவருக்குப் பதிலாக நடிகர் நானி டப்பிங் பேச உள்ளார்.

அவ்வளவாக பிரபலமாகாத ஹீரோவாக  துல்கர் இருந்தாலும், மணிரத்னம் படம் என்பதால் முன்னணி நடிகர் ஒருவரை வைத்துத்தான் டப்பிங் பேச வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்களாம்.

நானியின் குரல் மிகவும் வித்தியாசமாகவும், அருமையாகவும் இருக்கும் என்பதால் அவரைத்  தேர்வு செய்துள்ளார்களாம். இதற்கான வேலைகளும் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள்.

தமிழில் தமிழ்ப் புத்தாண்டு அன்று இந்தப் படம் வெளியாக உள்ளது. தெலுங்கிலும் அதே தினத்தில் வெளியிடுவார்களா அல்லது ஒரு வாரம் தள்ளி விடுவார்களா என்பது பின்னர்தான் தெரிய வரும்.

தெலுங்குத் திரையுலகில் சமீப காலமாக தமிழிலிருந்து தெலுங்கிற்கு வெளியாகும் டப்பிங் படங்களை தமிழில் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்தோ அல்லது இரண்டு வாரம் கழித்தோதான் வெளியிடுகிறார்கள்.

ஆனால், மணிரத்னம் படத்திற்கு அப்படி இருக்குமா என்பது தெரியவில்லை. தெலுங்கின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறார். எனவே, தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions