என் படத்தை வெளியிடாதீர்கள்... நாயகன் கோரிக்கை...

Bookmark and Share

என் படத்தை வெளியிடாதீர்கள்...  நாயகன் கோரிக்கை...

ஒரு படம் நடித்து முடித்து வெளி வராமல் முடங்கிக் கிடக்கிறதே என பலரும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, ஒரு ஹீரோ அவருடைய படத்தை வெளியிடாதீர்கள் என தயாரிப்பாளரிடம் வேண்டு கோள் வைத்திருக்கிறார்.

அவர் நான் ஈ புகழ் நானி. இவர் நடித்து கடந்த வருடமே வெளிவர வேண்டிய ஜன்ட பை கபிராஜு என்ற படத்தை யுகாதி தினத்தன்று வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார்.

தமிழில் ஜெயம் ரவி, அமலா பால் நடிக்க சமுத்திரக்கனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். யுகாதி தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக நானி நடித்துள்ள மற்றொரு படமான எவடே சுப்பிரமணியம் என்ற படம் வெளியாக உள்ளது.

இது சமீபத்தில் ஆரம்பித்து முடிக்கப்பட்ட ஒரு படம். ஜண்ட பை கபிராஜு படம் போல சில வருடங்களுக்கு முன்பே முடிக்கப்பட்ட படமல்ல. அதனால்தான், சமீபத்திய தயாரிப்பில் வரும் படம் வெளிவரும் போது நின்று போய் தாமதமாக வெளிவரும் படத்தை நானி விரும்பவில்லையாம்.

அதனால், ஜன்டபை கபிராஜு படத்தை யுகாதி தினத்தன்று வெளியிடாதீர்கள் என்று தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். ஆனால், அன்றைய தினத்தில் வெளியிடாமல் போனால் அதன் பின் படத்தை வெளியிடவே முடியாது, படத்தை மறந்து விட வேண்டியதுதான் என தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளாராம்.

தெலுங்குத் திரையுலகில் இதைப் பற்றித்தான் தற்போது பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது. ஒரு நாயகனே தன்னுடைய படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்பது என்றால் சும்மாவா...


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions