லாவண்யா திரிபதியுடன் கோவாவில் டூயட் பாடும் நானி -

Bookmark and Share

லாவண்யா திரிபதியுடன் கோவாவில் டூயட் பாடும் நானி -

தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் நானி, டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். டோலிவுட்டில் இறுதியாக  நானி நடிப்பில் வெளியான  எவிடே சுப்ரமணியம்  திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து நானி பலே பலே மகாதேவ்  என்ற படத்தில் நடிக்கின்றார். அல்லு அரவிந்த் தயாரிப்பில், இயக்குநர் மாருதி இயக்கும் இப்படத்தில், நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடித்து வருகின்றார்.

இப்படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. மேலும் நடிகர் நானி இப்படத்தில் தனக்கான டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

தற்போது நானி இப்படத்திற்காக  நடிகை லாவண்யா திரிபதியுடன் டூயட் பாடும்  பாடல் படப்பிடிப்பு கோவாவில்  நடைபெறுகின்றது. இப்பாடலுக்கான படப்பிடிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெறும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்து வருகின்றார்.இப்படத்தை அக்டோபர் மாதத்தில் திரையிடுவதற்கு படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions