பல்டி அடித்த நானி

Bookmark and Share

பல்டி அடித்த நானி

சமுத்திரக்கனி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால் நடிக்க கடந்த ஆண்டு வெளிவந்த படம் 'நிமிர்ந்து நில்'. அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் இது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கில் நானி நாயகனாக நடிக்க 'ஜன்டபை கபிராஜு' என்ற பெயரில் படமாக்கினார்கள்.

ஆனால், பட வெளியீட்டில் பிரச்சனை ஏற்பட்டு தமிழிலும் கொஞ்சம் தாமதமாகவே வெளிவந்தது. அதே சமயத்தில் தெலுங்கில் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை.

சில தேதிகளை அறிவித்து படத்தைத் தள்ளி வைத்தார்கள். ஒரு வழியாக தற்போது யுகாதி தினத்தன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். ஆனால், அதற்கு ஒரு தினம் முன்னதாக நானி நடித்த 'எவடே சுப்பிரமணியம்' என்ற புதிய படமும் வெளியாவதால்,  'ஜன்டபை கபிராஜு' படத்தை யுகாதி அன்று வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர்களுக்கு நானி வேண்டுகோள் வைத்திருந்தார்.

அதிலிருந்து நானி தற்போது பல்டி அடித்துவிட்டார். சில தினங்களுக்கு முன் 'ஜன்டபை கபிராஜு' படம் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்தவர்கள் நானியின் நடிப்பையும், படத்தையும் பாராட்டியுள்ளார்கள். மேலும், தமிழில் எடுபடாத சில காட்சிகளை தெலுங்கிலும் நீக்கிவிட்டார்களாம். அதனால், இந்தப் படமும் எப்படியும் வெற்றி பெற்று விடும் என நானிக்கு நம்பிக்கை வந்துள்ளதால்தான் இந்த திடீர் பல்டியாம்.


Post your comment





Related News
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
பாகுபலி டீமுடன் முதல்வன் இரண்டாம் பாகம் ரெடி- ஆனால் இயக்குனர் ஷங்கர் இல்லையா?
பாவனாவை கடத்தியவனை விசாரிக்கையில் மொபைல் போனில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
பாவனா வழக்கில் கைதான டிரைவர் பல நடிகைகளை மிரட்டி ஆபாச படம் எடுத்தாரா?: தீவிர விசாரணை
பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions