தெலுங்கு ஓ காதல் கண்மணி வரவேற்பிற்கு காரணமான நானி

Bookmark and Share

தெலுங்கு ஓ காதல் கண்மணி வரவேற்பிற்கு காரணமான நானி

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள ஓ காதல் கண்மணி படம் காதலர்கள் மத்தியில் மட்டுமல்லாது அனைத்து ரக திரை ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கிலும் திரைக்கு வந்த ஓகே கண்மணி படம், அங்கும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதிலும் தெலுங்கு ஓகே கண்மணி வரவேற்பிற்கு காரணமான நடிகர் நானி என்று கூறப்படுகின்றது. தெலுங்கில் நடிகர் துல்கர் சல்மானுக்கு பின்னணி பேசியுள்ளது நடிகர் நானி தானாம்.

இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகரான நானியை இயக்குநர் மணிரத்னம் அழைத்து நாயகனுக்கு பின்னணி பேசுமாறு கேட்டுக் கொண்டதும் மறுக்காமல் நானி ஒத்துக்கொண்டுள்ளார். தெலுங்கு ஓகே கண்மணி படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ள நானியின் குரலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றதாம்.  

 


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவரா?
ஓகே கண்மணி ஹிந்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வேகமாக நடக்கும் ஓகே கண்மணி ஹிந்தி படப்பிடிப்பு!
ஓகே கண்மணி ஹிந்தி பர்ஸ்ட் லுக் வெளியானது!
மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது ஓ காதல் கண்மணி!
ஹிந்தியில் ஓ காதல் கண்மணி
ஓ காதல் கண்மணி ரீமேக்கில் சோனாக்ஷி
50வது நாளில் இரண்டு படங்கள்...!
நித்யா மேனனுக்கு நான்கு வெற்றி...!
\'ஓகே கண்மணி\' வெற்றியைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions