வெப்பம் இயக்குநரின் படத்தில் மீண்டும் நானி

Bookmark and Share

வெப்பம் இயக்குநரின் படத்தில் மீண்டும் நானி

தெலுங்கு திரையின் இளம் நாயகன் நானி, தமிழில் வெளிவந்த வெப்பம் எனும் படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் திரைக்கு வந்த நான் ஈ படம் அவருக்கு தமிழ் திரையிலும் வெற்றிப் படமாக அமைந்தது.

நடிகை நித்யா மேனனுக்கும்  வெப்பம்  படம் முதல் தமிழ் படமாகும். இப்படத்தை பெண் இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கியிருந்தார். இப்படத்தில் இசையமைப்பாளர் ஜோஷ்னா இசையில் வெளிவந்த பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.

தற்போது இயக்குநர் அஞ்சனா அலி கான் பல்லாண்டு வாழ்க எனும் படத்தை தமிழில் இயக்கி வருகின்றார். மாஸ்கோவின் காவேரி,  வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்த  நடிகர் ராகுல் ரவீந்திரன் நாயகனாக நடிக்கும்  இப்படத்தில் நடிகர் நானி சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நானி தற்போது பலே பலே மகாதேவ் எனும் தெலுங்கு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், இயக்குநர் அஞ்சனா தனது நெருங்கிய தோழி என்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions