அர்விந்த்சாமியின் கேள்விகளுக்கு சுட்டித்தனமாக பதில் கூறும் தெறி நைனிகா!

Bookmark and Share

அர்விந்த்சாமியின் கேள்விகளுக்கு சுட்டித்தனமாக பதில் கூறும் தெறி நைனிகா!

விஜய்யுடன் தெறி படத்தில் நடித்ததன் மூலம் ஒரே நாள் பிரபலமானவர் நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா. சுட்டிதனமான இவருடைய நடிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.

இதனால் அடுத்தடுத்த கால்ஷீட் வேணும் என்று நடிகை மீனாவிடம் பலரும் கேட்க... அதற்கு மறுக்கும் மீனா, அவ படிக்கணும் என்று கூறி வருகிறாராம். 

விஜய் டிவியில் அரவிந்த்சாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அம்மா உடன் பங்கேற்று சுட்டித்தனமாக பதில் சொல்லி அசத்தியுள்ளாராம்.

அரவிந்த்சாமியின் நிகழ்ச்சியில் அவ்வப்போது சில பிரபலங்கள் கலந்துகொண்டு விளையாடுவார்கள். அந்தவரிசையில் தற்போது தெறி புகழ் நைனிகா தனது அம்மா மீனாவுடன் இதில் பங்கேற்றுள்ளார்.

அம்மா மீனாவைப் போல துறுதுறு பார்வை, குறும்புத்தனமான பேச்சு என அசத்தும் நைனிகா, அர்விந்த்சாமியின் கேள்விகளுக்கு சுட்டித்தனமாக பதில் சொல்லி அசத்தினாராம் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions