நண்பேன்டா இயக்குநருக்கு தேடி வரும் பட வாய்ப்பு!

Bookmark and Share

நண்பேன்டா இயக்குநருக்கு தேடி வரும் பட வாய்ப்பு!

கடந்த வாரம் வெளியான மூன்று படங்களில் வசூல் அடிப்படையில் கொம்பன் படம்தான் நம்பர் ஒன் என்று உலகம் முழுக்க உள்ள மக்கள் தீர்ப்பு எழுதி விட்டனர். உதயநிதி, நயன்தாரா நடித்த நண்பேன்டா படத்தை சந்தானம் இருந்தும் காப்பாற்ற முடியவில்லை.

அதே நேரம் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினமாக இருந்ததால் வசூலுக்கு குறைவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் நான்கு நாட்களில் கொம்பன் படத்தின் வசூல் சுமார் 12 கோடி என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

அதே நான்கு நாட்களில் நண்பேன்டா படத்தின் வசூல் 5 கோடி! நான்கே நாட்களில் படத்தின் பட்ஜெட்டைவிட அதிகமாக வசூலித்துவிட்டதால் இயக்குநர் ஜெகதீஷ் உற்சாகமாகிவிட்டார்.

நண்பேன்டா படத்தின் வசூல் காரணமாக சுமார் 4 பட நிறுவனங்கள் அவரை அணுகி படம் பண்ணும்படி கேட்டிருக்கின்றதாம். தவிர ரெட்ஜெயண்ட் பட நிறுவனமும் மீண்டும் உதயநிதி காம்பினேஷனில் படம் பண்ணும்படி கேட்டிருக்கிறதாம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions