'நண்பேன்டா' விமர்சகர்களுக்கான படமல்ல - உதயநிதி

Bookmark and Share

'நண்பேன்டா' விமர்சகர்களுக்கான படமல்ல - உதயநிதி

'கொம்பன், நண்பேன்டா' இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவந்ததால் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுக்குமிடையே உரசல் எழுந்ததாக கடந்த வாரம் பரபரப்பாக இருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு 'கொம்பன்' படத்தைப் பற்றி பாராட்டி விமர்சனங்களும், 'நண்பேன்டா' படத்தைப் பற்றி கடுமையான விமர்சனங்களும் வெளிவந்தன.

அதோடு 'கொம்பன்' படம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூலுடன் ஓடி வருவதாக தியேட்டர்காரர்களே தெரிவித்தனர்.  ஏப்ரல் 1ம் தேதி வெளியான 'கொம்பன்' படம் ஞாயிற்றுக் கிழமையுடன் முடிந்த முதல் வார வசூலிலேயே லாபத்துடன் கூடிய வசூலை அள்ளி விட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், 'நண்பேன்டா' படம் நெகட்டிவ்வாக வந்த விமர்சனங்களின் காரணமாகவும், உதயநிதி இதற்கு முன் நடித்த படங்களின் சாயலிலேயே இந்தப் படமும் இருப்பதாகவும் வந்த விமர்சனங்களையடுத்து பெரிய வசூலை ஈட்டவில்லை என்கிறார்கள்.

நேற்று திங்கள் கிழமை வசூல் பெரிதும் குறைந்து விட்டதாம். இந்த நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலின், “நண்பேன்டா'' படம் புத்திசாலித்தனமான விமர்சகர்களுக்கான படமல்ல.

ஆனால், குடும்பத்து ரசிகர்கள் படத்தை ரசித்துப் பார்க்கிறார்கள். விமர்சனங்கள் முக்கியமானவைதான், ஆனால், வருமானம் அதை விட முக்கியமானது,” எனச் சொல்லியிருக்கிறார். விமர்சகர்களின் விமர்சனத்தை விட ரசிகர்களின் விமர்சனத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்தாலே தெரிந்து கொள்ளலாமே...!


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions