நாரதனில் கலக்கும் காமெடி பட்டாளம்

Bookmark and Share

நாரதனில் கலக்கும் காமெடி பட்டாளம்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்திற்கு பிறகு நகுல் நடித்துள்ள படம் நாரதன். அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. நகுல் ஜோடியாக நிகிஷா படேல், ஸ்ருதிராமகிருஷ்ணன் நடிக்கிக்கிறார்கள். பிரேம்ஜி நாரதன் கேரக்டரில் நடித்துள்ளார்.

இவர்கள் தவிர ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, வையாபுரி, மயில்சாமி, பவர்ஸ்டார் சீனிவாசன், பாண்டு, கும்கி அஸ்வின் என ஒரு காமெடி பட்டாளம் நடித்திருக்கிறது.

"ஒரு பெண்ணை காப்பாற்றபோய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நகுல், தன் தாய்மாமன் பிரேம்ஜியை தேடி வருகிறார்.

அவர் இருவரையும் பிரித்தால் தான் பிரச்னை தீர்க்க முடியும் என்று கருதி பிரிக்க நினைக்கிறார். அவர் போடும் திட்டங்கள் இருவரின் நெருக்கத்தை அதிகமாக்குகிறது. இன்னொரு பெண்ணை விட்டு காதலிக்க வைக்கிறார்.

இப்படி பல நாரதர் வேலை பார்க்கிறார். ஆனால் எல்லாமே நன்மையில்தான் முடிகிறது. இப்படியொரு கலகலக காமெடி படம். ஒரு காமெடி பட்டாளத்தையே களம் இறக்கி நடிக்க வைத்திருக்கிறோம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் ரெயில் குத்துபாட்டும், இறுதியில் வரும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும், அந்தமானில் படமாக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகளும் ரசிகர்களை கவரும்" என்கிறார் இயக்குனர் நாகா வெங்கடேஷ்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions