அதிரடி வில்லனாகும் ஆடுகளம் நரேன்!

Bookmark and Share

அதிரடி வில்லனாகும் ஆடுகளம் நரேன்!

ஆடுகளம் படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகரானவார் நரேன். ஆனால் அவரது தோற்றம் அப்பா வேடங்களுக்கே பொருத்தமாக இருந்ததால் படத்துக்குப்படம் அப்பாவாகவே நடிக்க வைத்து வந்தனர். அதோடு, எந்த கேரக்டர்களையும் தவிர்க்காமல் அவர் நடித்து வந்ததால் அதிகப்படங்களில் நடித்து வந்தார்.

அதோடு, எனக்கு இவ்வளவு சம்பளம் தந்தால்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போடாமல் கம்பெனிகளைப் பொறுத்து சம்பளம் வாங்கி நடித்ததால் சிறிய பட்ஜெட் கம்பெனிகளின் ஆஸ்தான நடிகராக இருந்தார் ஆடுகளம் நரேன்.

இருப்பினும், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும என்று நினைக்கும் அவர், தற்போது மிகச்சிறிய படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார்.

மேலும், ஹீரோ, டைரக்டர் வேல்யூ கொண்ட படங்களாக தேடுகிறார்.  இந்த நேரத்தில் கலியுகம் என்ற படத்தில் ஒரு அதிரடியான வில்லனாக நடித்துள்ளார் நரேன்.

அதனால் இந்த படம் மட்டும் வந்தால் என்மீது விழுந்துள்ள அப்பா நடிகர் என்கிற முத்திரை மாறி, அதிரடியான வில்லன் நடிகர் என்கிற இமேஜ் ஒட்டிக்கொள்ளும் என்று கூறும் நரேன், இனிமேல் நான் பாசக்கார அப்பா மட்டுமல்ல, அதிரடியான அப்பாவும்கூட என்கிறார்.


Post your comment





Related News
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!
பிரபல மலையாள நடிகருக்கு திரையிடப்பட்ட துருவங்கள் பதினாறு படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions