என்னை நல்லவனாக்கிய சினிமா: நடிகர் நரேன்

Bookmark and Share

என்னை நல்லவனாக்கிய சினிமா: நடிகர் நரேன்

இப்போதைய இளைய தலைமுறை இயக்குநர்கள் தங்கள் படங்களில் குணச்சித்திர நடிகர்கள் பட்டியலில் முதலில் டிக் அடிப்பது நரேனைத்தான். அந்த அளவுக்கு அவர்களின் நட்புக்கும், அன்புக்கும் ஆளாகியிருக்கிறார் 'ஆடுகளம்' நரேன்.

ஆரம்பத்தில் நெகடிவ் வேடங்களில் நடித்தவர் போகப்போக குணச்சித்திர பாத்திரங்களுக்கு மாறினார். எது உங்கள் விருப்பம் என்றால்... "நான் நல்லவன் கெட்டவன் என்கிற வட்டத்தில் சிக்கிக் கொள்ளமாட்டேன்.

நான் ஒரு இயக்குநரின் கைப்பாவையாக இயக்குநரின் நடிகனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். ஆனால் சுந்தர பாண்டியன் போன்ற சில படங்களில் என்னைப் பாசிடிவாகப் பார்த்து விட்டு மரியாதை தருகிறார்கள்.

உங்களை மாதிரி அப்பா இல்லையே என்கிறார்கள். அப்பா என்றால் உங்களை மாதிரி இருக்கணும் என்கிற போது எனக்கே நெகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் நாமும் கூட நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

சிகரெட் பிடிக்கவே பயமாக இருக்கிறது. மது அருந்தப் போனால் உறுத்துகிறது. உள்ளுக்குள் உதைக்கிறது. குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. அப்படி மரியாதை தருகிறார்கள் ரசிகர்கள். இந்த வகையில் என்னை சினிமா நல்லவனாக மாற்றி இருக்கிறது என்பேன். எனவே சினிமாவை நான் நேசிக்கிறேன்."என்கிறார்.


Post your comment





Related News
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!
பிரபல மலையாள நடிகருக்கு திரையிடப்பட்ட துருவங்கள் பதினாறு படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions