நரேன்-சூரி இணைந்து காமெடியில் கலக்கும் கத்துக்குட்டி

Bookmark and Share

நரேன்-சூரி இணைந்து காமெடியில் கலக்கும் கத்துக்குட்டி

ரவுடி, வில்லன், ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நரேன், தற்போது முழுநீள நகைச்சுவை படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் அந்த படத்திற்கு ‘கத்துக்குட்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நரேனுக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும், சூரியும் இப்படத்தில் நடித்திருக்கிறார். 

இப்படத்தை புதுமுக இயக்குனர் இரா.சரவணன் இயக்கி வருகிறார். இதில் ஒரு பாடலுக்கு ‘காதல்’ சந்தியாவும், மற்றொரு பாடலுக்கு ‘சூப்பர் சிங்கர்’ அழகேசனும் நடனமாடி இருக்கிறார்கள்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் முதன்முறையாக அறிமுகமாகி இருக்கும் படமும் இதுதான். 45-ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பாளராகவும், தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்துவந்த ஜெயராஜ், இப்படத்தில் நரேனின் தந்தையாக நடித்திருக்கிறார். 

படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவடத்திலேயே படமாக்கியுள்ளனர். இப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடியாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

இப்படத்தை நிலா சாட்சி கிரியேஷன்ஸ் சார்பில் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் சார்பில் ராஜ்குமார், முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அருள்தேவ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions