நடிகை நர்கீசின் பிறந்த நாளைக் கொண்டாடிய கூகுள்

Bookmark and Share

நடிகை நர்கீசின் பிறந்த நாளைக் கொண்டாடிய கூகுள்

'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்தி நடிகை, முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான ’மதர் இந்தியா’ வில் நடித்தவர், என்று ஏகப்பட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரரான பழம்பெறும் இந்தி திரைப்பட நடிகை 'நர்கீஸ் தத்'தின் 86-வது பிறந்த நாளை, கூகுள் கொண்டாடுகிறது.

நர்கீசின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் தனது டூடுல் சேவைக்கான இடத்தில் நர்கீசின் அழகிய புகைப்படம் ஒன்றை வைத்து திரைத்துறையில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளது. 

1929-ம் ஆண்டு இதே ஜூன் 1 ஆம் தேதி பிறந்தவர் நர்கீஸ் தத். 1935 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர், கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் தமன்னா.

இந்தி நடிகர் ’சுனில் தத்’தை மணந்த இவர், திருமணத்திற்குப்பிறகு நடித்து வெளிவந்த ’ராத் ஆர் தின்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார்.

தன் இறுதிக்காலத்தில் கணையப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981-ஆம் ஆண்டு மே 3-ம் தேதி இயற்கை எய்தினார். இந்திய அரசாங்கம் இவரது பெயரில் "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions