இந்திய நடிகையின் ஒரு புகைப்படத்தால் பாகிஸ்தானில் வெடித்த பிரச்சனை

Bookmark and Share

இந்திய நடிகையின் ஒரு புகைப்படத்தால் பாகிஸ்தானில் வெடித்த பிரச்சனை

அமெரிக்க மாடல் மற்றும் பாலிவுட் நடிகையுமான நர்கிஸ் ஃபக்ரி நடித்த ஒரு விளம்பர படம், பாகிஸ்தானின் முன்னணி செய்தித் தாளான ஜாங் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்துள்ளது. இதற்கு அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது . நர்கிஸ் இப்புகைப்படத்தில் சிகப்பு நிற ஆடை அணிந்து படுத்தபடி கையில் ஒரு மொபைல் ஃபோனுடன் காட்சியளிக்கிறார்.

ஒரு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இது போன்ற விளம்பரப் படம் வந்திருப்பது இழிவானது மேலும் அபத்தமானது என அங்கு உள்ள பத்திரிகையாளர்கள் தங்களது எதிர்ப்பினை ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அன்சர் அப்பாசி என்பவர் முதலில் தனது எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து மேலும் எதிர்ப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

அன்சர் அப்பாசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜங் பத்திரியில் வந்துள்ள விளம்பரத்திற்கு எனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்கிறேன் என்று ட்விட் செய்துள்ளார். இதனை அடுத்து இன்று நர்கிஸின் புகைப்படம் நாளை சன்னி லியோனின் புகைப்படத்தைக் கூட வெளியிடுவார்கள் போல.

ஜங் பத்திரகை இதற்காக வெட்கப் படவேண்டும்.இது போன்ற புகைப்படங்கள் ப்ளேபாய் அல்லது பிற இதழ்களின் வந்தால் நன்றாக இருக்கும், அதை விடுத்து ஒரு செய்தித்தாளில் வருவது நல்லது அல்ல என்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

பெண்களையும் விளம்பர பொருட்களையும் சம்மந்தமே இல்லாமல் சம்மந்தப்படுத்தி, அதற்கு முன்னணி நடிகைகள் நடித்து, விளம்பரங்கள் வருவது புதிதல்ல என்றாலும் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் அவ்விளம்பரம் வந்திருப்பதே இந்த எதிர்ப்புகளுக்கு காரணம் என கண்டங்கள் வலுத்து வருகின்றன. 


Post your comment





Related News
ஹிந்தி பயிலும் நடிகைகள்
ஒரே மாதத்தில் 4 கிலோ உடல் எடையை குறைத்த நடிகை நர்கிஸ் பக்ரி
சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நர்கீஸ்
நடிகை நர்கீசின் பிறந்த நாளைக் கொண்டாடிய கூகுள்
சங்கீதா கேரக்டரில் நர்கீஸ் பஹ்ரி
ஜான் ஆபிரகாமுடன் நர்கீஸ் ரொமான்ஸ்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! நர்கீஸ் பக்ரியின் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு!!
நர்கிஸுக்கு விருந்து வைத்த ஹீரோ
ஒ மை காட் ஃபேஷன் ஷோவில் கவர்ச்சி இடத்தை கவர்ச்சியான ஆடையுடன் காட்டிய நர்கிஸ் ஃபக்ரி
பிரசாந்துடன் தான் கடைசி: இனி குத்தாட்டம் போட மாட்டேன்- நர்கிஸ் ஃப்கரி திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions