சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நர்கீஸ்

Bookmark and Share

சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நர்கீஸ்

கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதீனின் வாழ்க்கை வரலாறு "அசார்" என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏக்தா கபூர் தயாரிப்பில், டோனி டி சோஷா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில், அசாருதீனின் கேரக்டரில், இம்ரான் ஹாஸ்மி நடி்பபார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகள் தொடர்ந்து தயக்கம் காட்டிவந்த நிலையில், நடிகைகள் குறித்த அறிவிப்பு இறுதி செய்யப்படாமலேயே இருந்துவந்தது. இந்நிலையில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நர்கீஸ் பஹ்ரியும், பாட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா கேரக்டரில் ஹியூமா குரேஷியும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூவாலா கட்டா கேரக்டரில் நடிக்க முனன்தாக, நிம்ரத் கவுரை, படக்குழுவினர் அணுகியிருந்தனர். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions