போலீஸ் கமிஷனரிடம் நடிகர் நாசர் மனு!

Bookmark and Share

போலீஸ் கமிஷனரிடம் நடிகர் நாசர் மனு!

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடிகர்கள் ரமணா, உதயா, நடிகை லலிதா குமாரி ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த நடிகர் நாசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் சங்க நலனுக்காக நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 17-ந் தேதி நடக்கிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களும் கலந்துகொள்கின்றனர். ரசிகர்கள், மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நாசரிடம், டிக்கெட் கட்டணம் எவ்வளவு? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘கட்டணத்தை இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி குறித்து நடிகர் ரமணா நிருபர்களிடம் கூறும்போது, ‘6 ஓவர்கள் கொண்ட போட்டியாக காலை முதல் நடைபெறும். 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன. 50 நடிகர்கள் போட்டியில் விளையாடுகின்றனர். 50 நடிகைகள் உற்சாகப்படுத்துவார்கள்’ என்றார்.


Post your comment





Related News
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை - நடிகர் சங்க தலைவர் நாசர்
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
படப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?: நாசர் கேள்வி
22 துணை நடிகர்-நடிகைகளுக்கு நோட்டீசு: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு
நடிகர் சங்கம் திருட்டு DVD வேட்டை ஒரு லட்சம் புதுப்பட குருந்தகுடுகள் பறிமுதல்!
நடிகர் சங்கத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைக்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions