மழை வெள்ளம் நமக்குள் இருந்த மனிதாபமானத்தை வெளிக்கொணர வைத்துள்ளது: நாசர் பேச்சு

Bookmark and Share

மழை வெள்ளம் நமக்குள் இருந்த மனிதாபமானத்தை வெளிக்கொணர வைத்துள்ளது: நாசர் பேச்சு

சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரியில் சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் முரளிதரன், நிர்மலா, சமூக ஆர்வலர் அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நாசர் பேசும்போது, நாம் இம்மாதிரியான இயற்கை அழிவுகளை எதிர்பார்த்தது இல்லை. இயற்கை நமக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்து இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் இருந்த பல ஏரிகள் இப்போது சென்னையில் இல்லை. அவை எங்கே போய்விட்டன? அது அழிய காரணம் யார்? அரசியல்வாதிகள் அல்ல.

என்னையும் உங்களையும் போன்றவர்களின் பேராசைதான் காரணம். இந்த பேரழிவால் நமக்குள் இருந்த மனிதாபிமானம் வெளிவந்து, மனிதநேயம் காப்பாற்றப்பட்டுள்ளது. இன்று அனைவரும் அவர்களாக வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறார்கள். உதவி செய்ய நினைத்து யாராவது முன்வந்து நின்றால் அவர்களுடன் ஒரு பெரிய கூட்டமே வந்து நிற்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது இத்தனை ஆற்றல் கொண்ட நாம் இம்மாதிரியான செயல்களை மேலும் செய்ய வேண்டும் என்ற எண்ண தோன்றுகிறது. இந்த இயற்கை நமக்கு மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை வெளிக்கொணர வைத்துள்ளது. என்னால் முடிந்த உதவிகள் நான் எனது குழுவோடு சேர்ந்து செய்தேன்.

இங்கு கடவுளைவிட மனித சக்தியே ஓங்கியுள்ளது. இம்மாதிரியான செயல்களை நாம் இன்னும் தொடர்ந்து செய்யவேண்டும். இயற்கை நமக்கு கொடுத்த விழிப்புணர்வை பின்பற்றி செயல்படவோம் என்று கூறினார்.


Post your comment





Related News
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை - நடிகர் சங்க தலைவர் நாசர்
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
படப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?: நாசர் கேள்வி
22 துணை நடிகர்-நடிகைகளுக்கு நோட்டீசு: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு
நடிகர் சங்கம் திருட்டு DVD வேட்டை ஒரு லட்சம் புதுப்பட குருந்தகுடுகள் பறிமுதல்!
நடிகர் சங்கத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைக்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions