நம் கலாசாரத்தை சொல்லும் படங்கள் வேண்டும்-நாசர்

Bookmark and Share

நம் கலாசாரத்தை சொல்லும் படங்கள் வேண்டும்-நாசர்

லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் வொகேஷனல் எஜுகேஷன் அமைப்பு சார்பில், லயோலா கல்லூரியில்  திரைப்பட விழா நடந்தது. இதன் நிறைவுநாளில் நாசர் பேசியதாவது: விஸ்காம் மாணவர்கள், படங்களைப் பார்த்துவிட்டு விவாதிக்க வேண்டும். நம் கலாசாரம் மற்றும் கலைக்கூறுகளைப் பிரதிபலிக்கும் வகையில் படைப்புகளை உருவாக்க வேண்டும்.

நான் நடிகனாக வேண்டும் என்று நினைத்ததில்லை. என் தந்தையின் கனவு அது. நடிக்க வந்த பின் சிறந்த நடிகனாக மாற்றிக்கொண்டேன். எத்தனையோ படங்களில் பிடிக்காமல் கூட நடித்தது உண்டு.

அதில் கூட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பேன். இப்போது மடிக் கணிணியைத் தட்டினால், உலகப் படங்கள் மடியில் வந்து விழுகிறது. டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.

இதில் நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு, வித்தியாசமான படைப்புகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு கூறினார். விழாவில் இயக்குனர் மகிழ் திருமேனி, அஜயன் பாலா, ஜெயபதி, மதன் கேப்ரியேல், அருண்மொழி உட்பட பலர் கலந்துகொண்டனர். 


Post your comment





Related News
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
நட்சத்திர கலை விழாவிற்காக விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த நாசர்.!
தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர் : நடிகர் நாசர்!
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: நாசர் பட தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!
ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும். நடிகர் சங்கம் துணை!
நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது நாசர் ஐகோர்ட்டில் மனு
காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் நிலை என்ன? முழு அறிக்கை இதோ!
நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions