
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் நாசர். குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களிலும் தனது தனித்திறமையான நடிப்பால் இன்றும் இந்திய சினிமாவில் கோலோச்சி நிற்பவர்.
இவர் தற்போது ஹாலிவுட் படமொன்றில் போலீசாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பங்கஜ் சேகல் என்ற அல்ஜீரியா இயக்குனர் இயக்கும் ‘சோலார் எக்ளிப்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில்தான் நாசர் நடிக்கவுள்ளார்.
நாசர் ஏற்கெனவே ‘பேர் ஹேம்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்ர். இவர் நடிக்கும் இரண்டாவது ஹாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமில்லாமல், ‘நத்திங் பட் லைப்’, ‘மார்னிங் ராகா’ ஆகிய ஆங்கில படங்களிலும் நாசர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாசர் நடிப்பில் சமீபத்தில் ‘இறுதிச்சுற்று’ படம் வெளிவந்து பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கபாலி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Post your comment