மலையாளத்தில் நடிப்பதற்காக தெலுங்கு வாய்ப்புகளை உதறிய நாசர்..!

Bookmark and Share

மலையாளத்தில் நடிப்பதற்காக தெலுங்கு வாய்ப்புகளை உதறிய நாசர்..!

நாசரை பொறுத்தவரை அவர் பன்முக நடிகர். அதனாலேயே ஒரு பன்மொழி நடிகரும் கூட.. தமிழுக்கு அடுத்தபடியாக அவர் பிசியாக நடித்துக்கொண்டு இருப்பது தெலுங்கில் தான்.

மலையாளத்தில் அவ்வப்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒன்று என தலைகாட்டுவதுதான் வழக்கம். கடந்த 2013ல் 'ட்ராகுலா' மற்றும் 'கீதாஞ்சலி' என இரண்டு படங்களில் நடித்த நாசருக்கு இந்த வருடம் 'நமக்கொரே ஆகாசம்' (நமக்கு ஒரே ஆகாயம்) என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

தெலுங்கில் பிசியாக இருந்தாலும் மலையாள இயக்குனர் பிரதீப் சொன்ன இந்தப்படத்தின் கதை நாசரை கவர்ந்துவிடவே, தன்னை தேடிவந்த இரண்டு பெரிய பட்ஜெட் தெலுங்குப்பட வாய்ப்புகளை கூட உதறிவிட்டாராம்.

ஒரு தந்தை மகன் பயணம் சம்பந்தமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அவர்கள் இருவரும் வழியில் சந்திக்கும் கதாபாத்திரமாக நாசர் நடிக்கிறார். மேலும் இவர்களின் கதையை தனது குரலாலும் நகர்த்திச்செல்வது நாசர் தானாம். இன்னொரு வழிப்போக்கராக ஜாய் மேத்யூ நடிக்கிறார்.


Post your comment





Related News
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
நட்சத்திர கலை விழாவிற்காக விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த நாசர்.!
தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர் : நடிகர் நாசர்!
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: நாசர் பட தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!
ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும். நடிகர் சங்கம் துணை!
நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது நாசர் ஐகோர்ட்டில் மனு
காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் நிலை என்ன? முழு அறிக்கை இதோ!
நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions