நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது நாசர் ஐகோர்ட்டில் மனு

Bookmark and Share

நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது நாசர் ஐகோர்ட்டில் மனு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் சரத்குமார், பொதுச் செயலாளராக ராதாரவி, நிர்வாகியாக வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்பு இருந்தனர். இவர்கள் அனைவரும் 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிதியை முறைகேடு செய்துள்ளனர்.

இதற்காக போலி ரசீதுகள், ஆவணங்களை தயாரித்து சுமார் ரூ.1.65 கோடியை கையாடல் செய்துள்ளனர். இந்த முறைகேட்டை கண்டுபிடித்து, அதுகுறித்து சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி புகார் செய்தேன்.

ஆனால், இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல் மற்றொரு மனுவை சென்னை ஐகோர்ட்டில் நாசர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் ரூ.1.65 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்தேன். இதுவரை போலீசார் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த மோசடி வழக்கை சென்னை போலீசார் நியாயமாக விசாரிக்க மாட்டார்கள். அதனால் சுதந்திரமான புலனாய்வு அமைப்பின் மூலம், இந்த மோசடியை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
நட்சத்திர கலை விழாவிற்காக விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த நாசர்.!
தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர் : நடிகர் நாசர்!
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: நாசர் பட தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!
ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும். நடிகர் சங்கம் துணை!
நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் நிலை என்ன? முழு அறிக்கை இதோ!
நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா!
ஜுராசிக் பார்க் இயக்குனர் படத்தில் நாசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions