முதலமைச்சரிடம் ரூ. 1.1 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கிய நடிகர் சங்கம்!

Bookmark and Share

முதலமைச்சரிடம் ரூ. 1.1 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கிய நடிகர் சங்கம்!

கடந்த மாதம் சென்னை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் வீடு வாசல்களை இழந்து மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். அச்சமயத்தின் போது நடிகர் சங்கத்தை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று நிவாரண பொருட்களை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 11-ம் தேதி) தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்த நடிகர் சங்க தலைவர் நாசர், வெள்ள நிவாரண நிதியாக நடிகர்களிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ. 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் திரு. விஷால் துணை தலைவர்கள் திரு. பொன்வண்ணன் மற்றும் திரு கருணாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions