நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது!

Bookmark and Share

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது!

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (17-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள். 

இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நடிகர் சங்க பொதுக்குழு கூடும் தேதியும் முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது. அடுத்தமாதம் (மார்ச்) இறுதியில் பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகர்சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது, கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து செயற்குழுவில் ஆலோசிக்கப்படுகிறது.

 


Post your comment





Related News
நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா!
கணக்குகளை ஒப்படைக்க முன்னாள் நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் கால அவகாசம்
சரத்குமார் மீது போலீசிடம் புகார்: நடிகர் சங்க தலைவர் நாசர் அதிரடி!
சங்க கணக்கை ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: நடிகர் சங்கம் அறிக்கை
பீப் சாங் விவகாரம் - நடிகர் சங்கம் விளக்கம்
நடிகர் சங்கத்தின் கவுரவ பதவிக்கு சம்மதம் தெரிவித்த கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions