கணக்குகளை ஒப்படைக்க முன்னாள் நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் கால அவகாசம்

Bookmark and Share

கணக்குகளை ஒப்படைக்க முன்னாள் நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் கால அவகாசம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். சங்கத்துக்கு கட்டிடம் கட்டுதல், நட்சத்திர கிரிக்கெட் போட்டி மற்றும் புதிய படத்தில் இளம் நடிகர்கள் சம்பளம் இல்லாமல் நடித்து நிதி திரட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையில் முன்னாள் நிர்வாகிகள் வரவு-செலவு கணக்குகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 17-ந் தேதி நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் சென்னையில் கூடிய சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2014-15-ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளையும் நடிகர் சங்க அறக்கட்டளைக்கான 2013-14,

2014-15 ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு 3 மாதங்கள் கழித்தும் முழுமையாக சமர்ப்பிக்காததால், முன்னாள் நிர்வாகத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து நடிகர் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் கூறும்போது, ‘‘நடிகர் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன.

அதில் சில விளக்கங்களை தற்போதைய நிர்வாகிகள் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குள் குற்றப்பிரிவில் புகார் செய்வோம் என்று அறிவித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. சட்ட நடவடிக்கைகளை சந்திக்க தயார்’’ என்றார். 

இதையடுத்து முன்னாள் நிர்வாகிகள் கணக்குகளை ஒப்படைக்க 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் கணக்குகளை ஒப்படைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையில் நடிகர் சங்கம் ஈடுபடும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா!
நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது!
சரத்குமார் மீது போலீசிடம் புகார்: நடிகர் சங்க தலைவர் நாசர் அதிரடி!
சங்க கணக்கை ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: நடிகர் சங்கம் அறிக்கை
பீப் சாங் விவகாரம் - நடிகர் சங்கம் விளக்கம்
நடிகர் சங்கத்தின் கவுரவ பதவிக்கு சம்மதம் தெரிவித்த கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions