தமிழ் படக்குழுவினரை பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் நட்டி நடராஜ்!

Bookmark and Share

தமிழ் படக்குழுவினரை பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் நட்டி நடராஜ்!

நாளை, மிளகா, சதுரங்கவேட்டை, கதம் கதம் உள்பட பல படங்களில் நடித்தவர் நட்டி என்கிற நட்ராஜ். ஒளிப்பதிவாளரான இவர் இந்தி சினிமாக்களில் அதிகமாக ஒளிப்பதிவு செய்து வருகிறார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர். 

இந்த நட்ராஜ்தான் தற்போது மும்பை, கொல்கத்தாவிற்கு படப்பிடிப்புக்கு செல்லும் தமிழ் படக்குழுவினர் அங்கு ஏதாவது பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால், உடனே அங்கு சென்று பிரச்சினையில் இருந்து தமிழ் படக்குழுவை காப்பாற்றுகிறாராம். மேலும், பிரச்சினைக்குரிய இடங்களுக்கு நட்ராஜ் வந்து விட்டாலே அங்குள்ள சினிமாக்காரர்கள் அமைதியாகி விடுகிறார்களாம். பிரச்சினையை முடித்துக்கொண்டு நட்பாகி விடுகிறார்களாம். அந்த அளவுக்கு அவருக்கும், அவரது தொழிலுக்கும் அங்குள்ள சினிமாவில் மரியாதையாம். 

அதோடு, மற்றவர்களை தமிழ் சினிமாவினர் என்று பிரித்துப்பார்க்கும் இந்தி படஉலகினர், நட்ராஜை அப்படி பார்ப்பதில்லையாம். அவர் இந்திப் படங்களுக்கு அதிகமாக ஒளிப்பதிவு செய்திருப்பதால்தானோ என்னவோ அவரையும் பாலிவுட் சினிமாக்காரராகவே பார்க்கிறார்களாம்.


Post your comment





Related News
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
ஆர்யா - விஜய் சேதுபதியின் \'புறம் போக்கு\' படத்துக்கு எதிர்ப்பு.
மதில்மேல் பூனை படப்பிடிப்பில் புகுந்த யானை : அலறிய நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions