ஹீரோயின் சான்ஸுக்காக மொட்டையடித்த இளம் நடிகை

Bookmark and Share

ஹீரோயின் சான்ஸுக்காக மொட்டையடித்த இளம் நடிகை

இளையராஜா இசையில் உருவாகும் படம் ‘கிடா பூசாரி மகுடி’. தமிழ்மணி, நட்சத்திரா ஜோடி.  இதுபற்றி இயக்குனர் ஜெயகுமார் கூறியது: நாயகன் தமிழ் மணியின் கதாபாத்திரத்துக்கு மகுடி என பெயர்.

இந்த வேடத்துக்காக இவர் கிராப் முடியை நீண்ட முடியாக வளர்த்தார். ஆனால் படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் நட்சத்திரா தனது கதாபாத்திரத்துக்காக மொட்டை அடித்து நடித்திருக்கிறார்.

எந்த நடிகையுமே தங்கள் கூந்தலை இழக்க முன்வரமாட்டார்கள். ஆனால் அடுத்த படத்திற்கான வாய்ப்பு பாதிக்குமே என்றுகூட நினைத்துப்பார்க்காமல் மொட்டை அடிக்க நட்சத்திரா சம்மதித்தது பெரிய விஷயம்.

இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இரண்டரை மணிநேரம் படமாக்கப்பட்டு எடிட்டிங் செய்யப்படாமலிருந்த காட்சிகளை அவருக்கு திரையிட்டு காட்டியபோது இசை அமைக்க ஒப்புக்கொண்டார். தமிழ்மணி தயாரிக்கிறார்.

கிடா பூசாரி யார் என்கிறார்கள். கிடாக்களை பலிகொடுப்பதற்காகவே ஒரு பூசாரி இருப்பார் அவரைத்தான் இந்த வார்த்தை குறிக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை இதுவரை ஒரு ஆடுகூட பலி கொடுக்கப்படவில்லை. அதுபோன்ற காட்சி படத்திலும் கிடையாது.இவ்வாறு இயக்குனர் ஜெயகுமார் கூறினார். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions