திரையரங்குகளில் இனி தேசிய கீதம் கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

Bookmark and Share

திரையரங்குகளில் இனி தேசிய கீதம் கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பாக புகை பிடிப்பதின் தீங்கு குறித்த விழிப்புணர்வு வீடியோவை திரையிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஒவ்வொரு திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேசிய கீதத்தை படம் தொடங்குவதற்கு முன்பாக இசைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடியை காட்டவேண்டும். தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையரங்குக்குள் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில் வணிகரீதியான ஆதாயம் எதுவும் தேடக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இந்த உத்தரவை ஏற்று தேசிய கீதம் இசையமைப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்தபிறகு திரையரங்குகளில் இனி படம் திரையிடப்படுவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்படும்.


Post your comment





Related News
திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
இந்தியாவின் 64வது தேசிய விருது- வென்றவர்கள் யார் யார்?
எப்போது எழுந்து நிற்க வேண்டும்? தேசிய கீதம் பற்றி கோர்ட் மீண்டும் விளக்கம்
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 3 நாட்கள் நடக்கிறது
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் “ பஜிராவ் மஸ்தானி”
சென்னையில் சர்வதேச குறும்பட விழா: ஆயிரம் படங்கள் திரையீடு
12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது
செய்திதுறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி 12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்கிறார்
பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்
இந்தியாவில் முதன் முறை: கர்நாடக மாநிலம் முழுவதும் குழந்தைகள் திரைப்பட விழா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions