மூன்றரை கோடியில் தயாரான நட்பதிகாரம்!

Bookmark and Share

மூன்றரை கோடியில் தயாரான நட்பதிகாரம்!

பிரசாந்த் நடித்த கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, கார்த்திக் நடித்த சந்தித்த வேளை மற்றும் உற்சாகம் ஆகிய படங்களை இயக்கியவர் ரவிச்சந்திரன். இவர் 8 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது இயக்கியிருக்கும் படம் நட்பதிகாரம். ராஜ்பரத், ரேஷ்மிமேனன், தேஜஸ்வி உள்பட பலர் இப்படத்தின் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் நாயகன் புதுமுகம் என்றபோதும் கதாநாயகிகள் இருவருமே பல படங்களில் நடித்தவர்கள். இதில் தேஜஸ்வி தெலுங்கு சினிமாவில் ஐஸ்கிரீம் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர்.

அதையடுத்து தமிழ் சினிமாவையும் கலக்க வேண்டும் என்று இந்த படத்தில் படுகவர்ச்சியான உடையணிந்து நடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறாராம்.

மேலும், கடந்த மாதமே இந்த படத்தை வெளியிட முடிவு செய்த நிலையில், படம் எதிர்பார்த்தபடி வியாபாரமாகாததால் தாமதமாகிறதாம் அதாவது மூன்றரை கோடி செலவு செய்து எடுத்த படத்தை அதே விலைக்குத்தான் கேட்கிறார்களாம்.

அதனால் இவ்வளவு செலவு செய்து எடுத்த படத்தில் ஒரு சின்ன லாபமாவது கிடைக்க வேண்டாமா என்று கூறும் தயாரிப்பாளர், இன்னும் கூடுதல் விலை கொடுத்து படத்தை வாங்க யாராவது விநியோகஸ்தர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம்.


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions