நட்பதிகாரத்தில் ஹீரோக்களாக பதவி உயர்வு பெறும் செகண்ட் ஹீரோக்கள்

Bookmark and Share

நட்பதிகாரத்தில் ஹீரோக்களாக பதவி உயர்வு பெறும் செகண்ட் ஹீரோக்கள்

மஜ்னு, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்தவேளை, உற்சாகம் படங்களை இயக்கிய ரவிச்சந்திரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் 'நட்பதிகாரம் 79'. இதில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த ராஜ்பரத், வல்லினம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த அம்ஜத்கான் ஆகியோர் ஹீரோக்களாக பதவி உயர்வு பெற்று நடிக்கிறார்கள்.

ஹீரோயின்களாக ரேஷ்மி மேனன், தேஜஸ்வி நடிக்கிறார்கள். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார், தீபக் நிலம்பூர் இசை அமைக்கிறார். "எனது முந்தைய படங்களில் சென்ட்டிமெண்டான காதல் பற்றி நிறைய பேசி இருக்கிறேன்.

இதில் நட்பை பற்றி பேசுகிறேன். இன்றைய இளைஞர்களிடம் நட்பின் வீச்சு அதிகமாக இருக்கிறது. உறவினர்களை விட நண்பர்களை அதிகமாக நேசிக்கிறார்கள், நம்புகிறார்கள்.

அவர்களின் நட்புக்கு இருக்கும் ஒரே சவால் பெண்கள் மற்றும் காதல். இந்த சிக்கல் எப்படி உருவாகிறது. அதை எப்படி தவிர்ப்பது என்பதுதான் படத்தின் கதை. திருக்குறளில் நட்பாதிகாரம் என்பது 79வது அதிகாரத்தில் வருகிறது.

அதனால்தான் படத்திற்கும் நட்பதிகாரம் 79 என்று தலைப்பு வைத்திருக்கிறேன். கதைக்கு தேவை என்பதால் இரண்டு ஹீரோக்கள், ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். எனது படத்தில் பாடல்கள் ஸ்பெஷலாக இருக்கும். ஹாரிஸ் ஜெயராஜை நான்தான் அறிமுகப்படுத்தினேன்.

இந்தப் படத்தில் தீபக் நிலம்பூரை அறிமுகப்படுத்துகிறேன். இவரும் ஹாரிஸ் மாதிரி பெரிய இடத்துக்கு வருவார்" என்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்.


Post your comment





Related News
இசையமைப்பாளராக மாறிய பாடலாசிரியர்
‘நட்பதிகாரம் 79’ பட பாடலை வெளியிடும் சூர்யா!
நட்பதிகாரம் – 79 படத்திற்கு யு சான்றிதழ்
மூன்றரை கோடியில் தயாரான நட்பதிகாரம்!
நட்பு,காதல்,குடும்ப உறவுகள் பற்றி சொல்லும் ’’நட்பதிகாரம் - 79“
“ நட்பதிகாரம் - 79 “ படத்திற்காக இன்று தேவா பாடிய பாட்டு
“ நட்பதிகாரம் - 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு
டபுள் ஹீரோ, ஹீரோயின் கதை
கண்ணெதிரே தோன்றினாள் ரவிச்சந்திரன் இயக்கும் \'நட்பதிகாரம் -79\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions