தோனி, தோனி தான் : வியக்கிறார் நட்டி என்கிற நட்ராஜ்

Bookmark and Share

தோனி, தோனி தான் : வியக்கிறார் நட்டி என்கிற நட்ராஜ்

சதுரங்கவேட்டை நாயகன் நட்டி என்கிற நட்ராஜ் இப்போது மும்பையில் மோஸ்ட் வாண்டட் கேமராமேன். பாலிவுட்டில் பிரபல நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவம் மட்டுமல்ல பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடனும் பணியாற்றிய பெருமைக் குரியவர் நட்டி.

கிரிக்கெட் வீரர்களில் யார் சிறந்த நடிகர் என்று கேட்ட போது. "நான் எல்லா கிரிக்கெட் வீரர்களுடனும் தனித்தனியே விளம்பரங்களில் பணியாற்றி படம் பிடித்திருத்திருக்கிறேன் சச்சின், டிராவிட், கம்பீர், வீராட் கோலி, டோனி, சேவக் ஒருவர் பாக்கியில்லை. ஆனாலும் தோனியை என்னால் மறக்க முடியாது. தேசிய ஒருமைப்பாட்டுக்காக ஒரு விளம்பரம் எடுத்தோம்.

இரண்டு நாள் தான் கால்ஷீட். மும்பை பிலிம் சிட்டியில் எடுத்தோம். அவுட்டோர் இண்டோர் இரண்டிலும் எடுக்க வேண்டி இருந்தது. இந்தியாவின் அனைத்து முக்கிய கிரிக்கெட் வீரர்களும் வந்திருந்தார்கள். முதல்நாள் திட்டமிட்டபடி எடுத்தோம் பிரச்சினை இல்லாமல் போனது. மறுநாள் திடுதிப்பென மழை பிடித்துக் கொண்டது.

எங்கள் திட்டம் எல்லாமே பணால் ஆனது. மாலைக்குள் முடிக்க வேண்டும். மிஞ்சிப் போனால் இரவு 8 மணிக்குள் முடிக்க வேண்டும். ஆனால் மழை குறுக்கிட்டதால் முடியவில்லை. ஆனாலும் எல்லாரும் ஒத்துழைத்தார்கள்.

மறுநாள் காலை 5 மணிக்கு பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஏன் என்றால் அடுத்தநாள் இன்னொரு நாட்டுக்கு எதிராக களம் இறங்க வேண்டும். மற்றவர்கள் என்றால் கேன்சல் செய்துவிட்டுப் போய் விடுவார்கள்.

இதை நினைத்து எல்லாரும்  பதற்றத்தில் இருந்தார்கள். ஆனால் டோனி எல்லாரையும் கன்வின்ஸ் செய்தார். நாட்டுக்காக நல்ல நோக்கத்துக்காக செய்கிறோம் ஒத்துழைப்போம் படப்பிடிப்பை முடித்துவிட்டே செல்வோம்  என்றார்.

இரவு 10.30வரை படப்பிடிப்பு போனது. அப்போது அவர்கள் எனக்கு ராணுவ வீரர்கள் போலத் தோன்றினார்கள். அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கினார்கள். கேப்டன் தோனி ராணுவ கேப்டன் போலவே தோன்றினார். அதனால்தான் சொல்கிறேன் தோனி என்றும் கேப்டன் தோனி தான் என்றார் நட்டி.


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!
விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions