கதைகளுடன் நட்டியை முற்றுகையிடும் டைரக்டர்கள்!

Bookmark and Share

கதைகளுடன் நட்டியை முற்றுகையிடும் டைரக்டர்கள்!

பாலிவுட் வரை கொடிகட்டிப்பறக்கும் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ். நாளை,  மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, கதம் கதம் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதில் சதுரங்க வேட்டை படம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் ஹிட்டானது. ஆனபோதும், அடுத்தடுத்து கேமராமேனாக பல படங்களில் கமிட்டாகியிருந்ததால், கதம் கதம் என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிக்க ஒத்துக்கொண்டார்.

அந்த படத்தில் முதலில் நந்தாதான் முக்கிய நாயகனாக கமிட்டாகியிருந்தார். திடீரென நட்டி படத்துக்குள் வந்ததால் இவருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு, சதுரங்க வேட்டை போன்றே இந்த படமும் வெற்றி பெறும் என்று பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தது ஆனால், கதம் கதம் வெற்றி பெறவில்லை.

இருப்பினும், நட்டிக்காக ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டு பல டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்ல அலைகிறார்களாம். அதனால் தற்போது விஜய்யின் புலி பட வேலைகளில் விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நடராஜ், நேரம் கிடைக்கும்போது கதையும் கேட்கிறார்.

குறிப்பாக, தனது ஸ்டைலுக்கேற்ப நெகட்டிவ் வேடம் என்றால் அந்த கதையை ஆர்வத்துடன் கேட்கும் நட்டி, புலி முடிந்த பிறகு மேற்கொண்டு பேசுவோம் என்று அந்த டைரக்டர்களை வழியனுப்பி வைக்கிறாராம்.


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!
விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions