கட்-அவுட் கலாசாரம் பற்றி ஒரு படம்!

Bookmark and Share

கட்-அவுட் கலாசாரம் பற்றி ஒரு படம்!

ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் கட்-அவுட், எதற்கெடுத்தாலும் கட்-அவுட் என்று இருந்தது. ஒரு வழியாக அரசு கட்-அவுட் கலாச்சாரத்துக்கு தடைவிதித்து கெட் அவுட் கூறியது. ஆனாலும் கட்-அவுட் கலாச்சாரம் குறைந்தபாடில்லை. அப்போது அந்த கலாச்சாரம் எற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த மையமாக வைத்து எங்கிட்ட மோதாதே என்கிற பெயரில் ஒரு படம் உருவாகிறது.

முன்பு விஜயகாந்த், ஷோபனா நடிக்க ஆர். சுந்தர்ராஜன் இதே பெயரில் ஒரு படம் இயக்கி இருந்தார். அதே பெயரி்ல் உருவாகும் இந்தப் படத்தை இயக்குகிறார் ராமு செல்லப்பா என்கிற புதுமுக இயக்குநர். இவர் பாண்டிராஜ், செல்வராகவன் இருவரிடமும் உதவி இயக்குநராக சினிமா கற்றவர்.

படத்துக்கு இந்தப் பெயர்தான் பெருத்தமாக இருப்பது தெரிந்து ஆர்.சுந்தர்ராஜனிடம் அனுமதி கேட்டுள்ளனர். முதலில் கதை சொல்லு பிறகு பார்க்கலாம் என்றவர், கதையைக் கேட்டதும் தலைப்பை தருவதில் எனக்கெந்த சங்கடமும் இல்லை.

நான்தான் நன்றாகக் கதை சொல்பவன் என்பார்கள் என்னிடமே கதை சொல்லி அசத்திட்டியேப்பா நீ நல்லா வருவே என்று வாழ்த்தினாராம் ஆர்.சுந்தர்ராஜன்.

இதனால் பூரிப்புடன் இருக்கிறார் ராமு செல்லப்பா. நட்டி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், ராஜாஜி நடிக்கிறார்கள். புதிய களத்தில் விறுவிறுப்பான திரைக்கதையோடு விழிப்புணர்வு கருத்தும் கொண்ட படமாக உருவாகிறதாம் எங்கிட்டே மோதாதே. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நெல்லைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
விஜய்க்கு அப்படி இருந்தால் பிடிக்காது? நடிகர் நட்டியின் உண்மை
நட்டி நடிக்கும் 'போங்கு'.... விதவிதமான கார்கள்...பரபர திரைக்கதை: வீடியோ
சசிகலா, நடராஜன் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண் ஜெ... சொன்னது வலம்புரி ஜான்
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
ஒளிப்பதிவாளர் நட்ராஜ்வுடன் இணையும் ராய் லட்சுமி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions