சென்டிமெண்ட் பார்த்து தென்னந்தோப்பில் நடிக்க மறுத்த நடிகை

Bookmark and Share

சென்டிமெண்ட் பார்த்து தென்னந்தோப்பில் நடிக்க மறுத்த நடிகை

ராஜ்கபூர் உதவி இயக்குனர் காம்ரன் இயக்கும் படம் நவரச திலகம். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தென்னந்தோப்புகள் அதிகம் நிறைந்த பொள்ளாச்சி பகுதியில் நடந்துள்ளது.

அப்போது யாரோ தென்னந்தோப்பில் படபிடிப்பு நடக்கும் போது தேங்காய் தலையில் விழும், அப்படி விழுந்தால் அவங்களுக்கு நேரம் சரியில்லாமல் போய் விடும் என்று நாயகி சிருஷ்டியிடம் கதை விட்டுருக்கிறார்கள்.

சென்டிமெண்ட் தலைவிரித்தாடும் சினிமாவில் இது உண்மை என்று நம்பி நாயகி தென்னந்தோப்பில் நடிக்க மறுத்து அடம்பிடித்து இருக்கிறார். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.

மரம் எவ்வளவு செழிப்பாக இருக்கிறதோ அதேப்போல உன் கேரியரும் செழிப்பாக இருக்கும் என்று யூனிட்டில் உள்ளவர்கள் எடுத்து கூற பிறகு நாயகி நடிக்க சம்மதித்திருக்கிறார். 

பொள்ளாச்சி லோக்கேஷன் முழுவதும் முடித்துக்கொண்டு படபிடிப்பு குழுவினர் அடுத்து திருச்சி மலைக்கோயில் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இது முடிந்தவுடன் விவசாய நிலங்கள் அதிகம் உள்ள கும்பகோணத்தில் படபிடிப்பு நடத்தி முடிவடைய உள்ளது.

நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு துரோகம் செய்யும் சில இளைஞர்களின் கதைதான் படத்தின் கரு. இதில் மா.கா.பா. ஆனந்த் நாயகன். பலர் நடித்திருந்தாலும் தன் குருநாதர் ராஜ்கபூரை நடிக்க வைக்க முடியவில்லை என்கிற வறுத்தம் இயக்குனருக்கு இருக்கிறதாம்.


Post your comment





Related News
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
`நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions