அறிமுக நாயகன் நவீன் படத்திற்கு தலைப்பு ரெடி

Bookmark and Share

அறிமுக நாயகன் நவீன் படத்திற்கு தலைப்பு ரெடி

தெலுங்கு திரையின் பிரபல இயக்குநர் கிருஷ்ண வம்சியின் உதவி இயக்குநர் ராம் பிரசாத் இயக்கும் படத்தில் நவீன் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் பிரபல  நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகின்றார்.

இது வரை பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்போது ஐனா இஷ்டம் நுவ்வு என படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர். பிரண்ட்லி மூவிஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அச்சு இசையமைத்துள்ளார்.

பிரபல நடிகர் கெஜபதி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை ரச்சனா மௌர்யா குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும்  நவீன் டோலிவுட்டின் மூத்த நடிகர் நரேஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என  படப் பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions