நாயகன் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் திடீர் மரணம்

Bookmark and Share

நாயகன் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் திடீர் மரணம்

தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்தவர் பிரதீப்சக்தி. இவர் தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். கமலஹாசனின் ‘நாயகன்’ படத்தில் போலீஸ்காரராக நடித்து உள்ளார். இதேபோல் ‘குணா’ படத்திலும் காமெடி கலந்த வில்லனாக நடித்து உள்ளார். 

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பிரதீப் சக்திக்கு மனைவி இல்லை. ஒரே மகள் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் வசித்து வருகிறார். மகளுடன் தங்கி இருந்த பிரதீப் சக்தி அவ்வப்போது ஐதராபாத் வந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

இவர் கடைசியாக ‘சுப்பிரமணியம் பர்சேல்’ என்ற தெலுங்கு படததில் நடித்தார். கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தங்கி இருந்த அவருக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions